மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியத்தைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

maharashtra

Advertisment

Advertisment

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அதற்குள் மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாளை ஆளுநரை நேரில் சந்தித்து பேச உள்ளனர்.