Skip to main content

சூப்பர் மார்க்கெட்டுகளில் 'ஒயின்' விற்பனைக்கு அனுமதி!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Maharashtra government allows sale of wine through supermarkets and shops

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் 'ஒயின்' விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மதுக்கடைகளில் மட்டுமே 'ஒயின்' விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் 'ஒயின்' பாட்டில்களை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட வசதிகளை உடைய இடங்களில் 'ஒயின்' விற்பனை செய்யலாம் என்றும், அதே நேரத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

பழச்சாறும் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்த முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசின் முடிவுக்கு அம்மாநில பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காண வருவோருக்கு மது பாட்டில்; எம்எல்ஏவின் காணும் பொங்கல் அலப்பறை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
A bottle of wine for visitors;  MLA gift to volunteers

தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் நிலையில் ஆந்திராவிலும் சில இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திராவில் எம்எல்ஏ ஒருவர் காணும் பொங்கல் தினத்தன்று தன்னை காண வருவோருக்கு மது பாட்டிலும் உயிருடன் கோழியும் பரிசாக அளித்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வாசுப்பள்ளி கணேஷ் என்பவர் காணும் பொங்கல் அன்று தன்னைக் காண வரும் தொண்டர்களுக்கு முழு மது பாட்டிலையும், உயிருடன் ஒரு கோழியையும் வழங்குவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எல்.ஏ வாசுபள்ளி கணேஷ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தசரா பண்டிகையின்போது கட்சிக்காரர்களுக்கு சினிமா டிக்கெட், கோழிக்கறி, மதுபானம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.  ஆந்திராவில் ஒரு நபர்  அதிகபட்சமாக மூன்று பாட்டில்களை சேமிக்க மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 400 மதுபாட்டில்களை சேமித்து விநியோகித்த எம்எல்ஏவின் செயல் குறித்து கலால் அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“அம்புட்டும் ஒயினாம்...” - ஒயின் வெள்ளத்தில் சிக்கிய ஊர்

Published on 12/09/2023 | Edited on 20/09/2023

 

A town caught in a flood of wine

 

மழைக் காலங்களில் நீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வெள்ளம் அடித்துக்கொண்டு செல்வதையும் அதில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்பதையும் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒயின் வெள்ளம் கேள்விப்பட்டதுண்டா? ஆமாம் ஒரு ஊரையே சுற்றி வளைத்துத் திகைக்க வைத்துள்ளது இந்த திடீர் ஒயின் வெள்ளம்.

 

போர்ச்சுக்கல்  நாட்டின் அனாடியாவில், டெஸ்டிலேரியா லெவிரா எனும் ஒயின் ஆலையில் இரண்டு டாங்குகள் திடீரென வெடித்துச் சிதறின. இதன் விளைவாக, ஒயின் கசிவு ஏற்பட்டு வெளியேறத் துவங்கியது. ஆலையின் எல்லைக்கு அப்பால் தெறித்து, நகரின் பல தெருக்களில் ஒயின் வெள்ளம் போல் ஓடியது. இந்த சம்பவம் செப்டம்பர் 10ம் தேதி நடந்தது. எதனால் இந்த உடைப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் சுமார் 2.2 மில்லியன் லிட்டர் ஒயின் கசிந்துள்ளது. இதனை நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், அந்த ஒயின் வெள்ளக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.