உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் 3.20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,04,568 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,830 பேர் உயிரிழந்துள்ளனர்.