Skip to main content

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Legendary Telugu actor Krishna passed away

 

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கிருஷ்ணாவின்  உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கார்த்தி படப்பிடிப்பில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
karthi sardar 2 shooting accident stunt member passed away

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்தது. 

இதற்கிடையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று கடந்த 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது. 

சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் படப்பிடிப்பு தளத்தில் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை பயிற்சியின் போது, அவர் தவறி விழுந்த நிலையில் மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  

Next Story

தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MP sworn in Telugu

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர். 

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.