
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்சித்திக் தற்போது காலமானதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் சித்திக். தமிழில் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்', விஜயகாந்த்தின் 'எங்கள் அண்ணா', பிரசன்னாவின் 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். பின்பு மீண்டும் விஜய்யை வைத்து 'காவலன்' மற்றும் கடைசியாகத்தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டுதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததால் எக்மோ (ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)