Skip to main content

லடாக் விவகாரம்... பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
 The Ladakh affair ... All party meeting started under Modi's leadership

 

லடாக் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலமாக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ். பங்கேற்றுள்ளார். திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த காணொலி ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்