Skip to main content

கேரளாவில் நடந்த வினோத திருவிழா; பெண் வேடத்தில் வந்த ஆண்கள்

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

kerala kollam kulakara devi temple festival viral

 

கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் ஆண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு பெண் தோற்றத்தில் பங்கேற்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

 

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டம் குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமயவிளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்  ஆயிரக்கணக்கான ஆண்கள் தங்களை பெண்கள் போன்று அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்கின்றனர். இதனை ஒரு வேண்டுதலாக கருதி அதனை நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம்  தங்களது வீடுகளில் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 

அவ்வாறு பெண் போன்று அலங்காரம் செய்து கோயிலுக்கு வரும் ஆண்கள், கோயிலில் ஐந்து முக விளக்கை ஏற்றி இரவு முழுவதும் கோயிலை வலம் வந்து கடவுளை வழிபடுகின்றனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Cauvery Management Commission meeting in Delhi

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Next Story

'சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்' - போலீசார் விசாரணை

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
 'Birthday celebration with knife on the road'-Police investigation

பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் சமீப காலங்களில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பட்டாக்கத்தியை சாலையில் தீட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் கடந்த சில இடங்களுக்கு முன்பு பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் பெரிய பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடியதோடு ஈசிஆர் சாலையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அணிவகுப்பாக சென்றவர்கள் பட்டாகத்தியை சாலையில் தீட்டி தீப்பொறி கிளம்பும் வகையில்  செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளம் வாயிலாக காவல்துறையினரின் பார்வைக்கு சென்ற நிலையில் இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கிரேன் மூலமாக பெரிய மாலையை எழிலரசனுக்கு சூட்டிய இளைஞர்கள் காரில் பட்டாக்கத்தியைத் தேய்த்தபடி செல்லும் வீடியோ காட்சிகளை 'லீ பிரதர்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எங்களுக்கு எதிரிகளே இல்லை' என்ற வாசகத்தோடு பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.