Skip to main content

தமிழில் "96" மலையாளத்தில் "த்ரிஷியம்" பட பாணியில் நடத்தப்பட்ட கொலை!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

கேரளா மாநிலம் கொச்சி உதயம்பேரு காவல்நிலையத்தில் மனைவி வித்யா (43) காணவில்லை என்று கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும்  பிரேம்குமார்(48) புகார் மனு கொடுக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார்கள். பிரேம்குமார் கொடுத்த ஓவ்வொரு தகவலின் அடிப்படையில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் துலக்கவில்லை. பிரேம்குமாரும் போலீசுக்கு சந்தேகம் இல்லாத படி நடந்து கொண்டார்.
 

இந்த நிலையில் போலீசார் முக்கியமான ஓருவரை பிடித்து விசாரிக்க இருப்பதாகவும், அவர் மீது தான் சந்தேகம் என்று பிரேம்குமாரின் காதுக்கு எட்டும்படி தகவலை கசிய விட்டனர். அதனால் பிரேம்குமார் தன்னை இந்த வழக்கில் போலீசார் விசாரிக்க கூடாது என்று கொச்சின் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து போலீசாருக்கு பிரேம்குமார் மீது சந்தேகம் வலுத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். 

KERALA INCIDENT POLICE INVESTIGATION TAMIL FILM 96


அப்போது மனைவியை பள்ளி காதலியுடன் சேர்ந்து வாழுவதற்காக கொலை செய்து நாடகமாடியதாக பிரேம்குமார் ஒப்பு கொண்டார். இதையடுத்து கொலை குறித்து கூறுகையில், பிரேம்குமார் ஹோட்டல் ஓன்றில் வேலை பார்க்கும் போது அங்கு வந்த வித்யாவிடம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருடைய குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக தான் சென்று கொண்டியிருந்தது.
 

இந்தநிலையில் தான் ஹைதராபாத்தில் கணவன் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த சுனிதா (48) இவா்களின் சந்தோஷமான வாழ்க்கைக்குள் நுழைகிறாள். பிரேம்குமாரும் சுனிதாவும் 1994- 95 யில் திருவனந்தபுரத்தில் 10- ஆம் வகுப்பு ஒன்றாக படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் சக மாணவர்கள் என்ற பழக்கத்தை மீறி இருவரும் ஒருலையாக காதலித்து இருக்கிறார்கள். அதோடு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தான் அந்த ஆண்டில் படித்த மாணவர்களின் கெட்டு கெதர் (get together) நிகழ்ச்சி கடந்த மே மாதம் 25-ம் தேதி நடந்தது.
 

இதில் பிரேம்குமார் தனது மனைவி வித்யாவுடனும் சுனிதா தனது கணவா் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். அப்போது பிரேம்குமாரும், சுனிதாவும் நெருங்கிய பழகி பேசியதில் பழைய நினைவுகள் ஞாபகம் வரவே இருவரும் நெருக்கமாகி இருக்கிறார்கள். இதன் விளைவு சுனிதா கணவன் குழந்தைகளை விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நா்ஸ் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். பிரேம்குமாரும் சுனிதாவும் கணவன் மனைவி போல் வாழ தொடங்கினார்கள். இது வித்யாவுக்கு தெரிய வர அவள் கண்டித்ததால் வித்யாவை கொலை செய்து இருவரும் கணவன் மனைவியாக வாழ முடிவு செய்தனர்.
 

இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த வித்யாவுக்கு ஆயுா்வேத மருந்துடன் மது கலந்து கொடுத்து இருவரும் தமிழில் 96  மலையாளத்தில் த்ரிஷியம் பட பாணியில் வித்யாவை கொலை செய்து, அவளுடைய செல்போனை திருவனந்தபுரம் மும்பை செல்லும் நேத்ராவதி ரயிலில் போட்டு விட்டனா். வித்யாவின் உடலை இருவரும் காரில் ஏற்றி நெல்லை மாவட்டம் ஏா்வடி மலைப்பகுதியில் கொண்டு போட்டனர் என்று காவல்துறையினர் கூறினர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  

சார்ந்த செய்திகள்

 

Next Story

கைமாறிய பெரும் தொகை?-ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் இருவர் கைது

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Huge amount changed hands?- Two more arrested in Armstrong case including woman

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கறிஞரான ஹரிஹரன் தரப்பில் இருந்து கொலையாளிகளுக்கு பெரும் தொகை மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மலர்கொடி  ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மனைவி  என்று தெரியவந்துள்ளது. எதற்காக, யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

போலீஸுக்கு வந்த பரபரப்பு வீடியோ; நடவடிக்கை எடுப்பதற்கு முன் நடந்த பகீர் சம்பவம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
couple decide incident at telangana

தெலுங்கானா மாநிலம், கோத்தகிரி காவல் துணை ஆணையர் சந்தீப்புக்கு, இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் நின்று பேசியபடி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அந்த இளம்பெண், நீண்ட காலத்திற்கு முன் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அதனை அவருடைய கணவர் மன்னித்து விட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், ‘தன்னுடைய குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வந்ததால் மன உளைச்சலில் ஆளான நாங்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட சந்தீப், உடனடியாக காவல் துணை ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து தம்பதியரின் தற்கொலையை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, உள்ளூர் போலீசாரும் கோதாவரி ஆற்று பகுதியில் தம்பதியரை தேடி வந்துள்ளனர். ஆனால், அவர்களை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து, அவர்களின் செல்போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு தேடினர். அதன்படி, போலீசார் தேடியதில் ரெயில் தண்டவாளத்தில் செல்போன் இருப்பதாக காண்பித்தது. ரெயில் தண்டவாளத்தில் சென்று பார்த்தபோது தம்பதியர் இருவரும் இறந்துகிடந்து உடல்கள் மட்டும் கிடந்தன.

அதனையடுத்து, அந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நிஜாமாபாத் மாவட்டம் ஹெக்தோலி பகுதியைச் சேர்ந்த அணில் (28) என்பதும், அவருடைய மனைவி சைலஜா (24) என்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த அன்று வீட்டை விட்டு வெளியேறிய தம்பதி, போலீஸுக்கு வீடியோவை அனுப்பிவிட்டு நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது. போலீஸுக்கு வீடியோ அனுப்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.