/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsddd_3.jpg)
கேரளா தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய கும்பலோடு கேரள அமைச்சர்கள் சிலரின் எட்டு தனி உதவியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கக்கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது. இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் மற்றொரு முக்கியக் குற்றவாளியான ஃபைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விரைவில் ஃபைசல் ஃபரீத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வரும் சூழலில், இந்தத் தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய கும்பலோடு கேரள அமைச்சர்கள் சிலரின் எட்டு தனி உதவியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)