Skip to main content

பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

தென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.  

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI


இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi road show in Wayanad

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையடினார்.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இத்தொகுதியில் சிபிஐ சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் கேரள மாநிலத் தலைவர் கே சுரேந்திரனும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளது கவனிக்கத்தக்கது. 

Next Story

அனல் பறக்கும் வயநாடு; முக்கிய தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல்! 

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Wayanad; Major leaders filing nominations

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வயநாட்டில் சிபிஐ வேட்பாளர் அன்னி ராஜா இன்று (04.03.2024) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வயநாடு தொகுதி சி.பி.ஐ. வேட்பாளர் அன்னி ராஜா கூறும்போது, “இடது முன்னணி வேட்பாளராக என்னிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் தெரிந்துகொள்ள நான் செல்கிறேன். எனவே, நாங்கள் வாக்களித்தால் நீங்கள் இங்கு வருவீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்காக இந்தத் தொகுதியில் இருந்து என்னைத் தேர்ந்தெடுத்தால் நான் இங்கே இருப்பேன் என்று அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் அவர்களுடன் இருப்பேன் என்று அவர்களிடம் கூறும்போது, மனித - விலங்கு மோதல் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு, நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்காக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்வது முக்கியம். ஆனால் அது கேரள சட்டசபையில் அல்ல. நாடாளுமன்றத்தில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி.யும் வேட்பாளருமான ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தனது தொகுதியான வயநாட்டில் ரோட் ஷோ நடத்தினார். அப்போது அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், “வயநாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் எனக்கு அன்பையும், பாசத்தையும், மரியாதையையும் அளித்து என்னைத் தங்கள் சொந்தமாக நடத்தினார்கள். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்குக் கிடைத்த பெருமை. நான் உங்களை ஒரு வாக்காளர் போல் நினைக்கவில்லை. அது போன்று உங்களை நடத்தவில்லை. என் சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ அதே மாதிரி தான் உங்களையும் நடத்துகிறேன். உங்களை பற்றி நினைக்கிறேன். எனவே வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளனர். அதற்காக என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்.

Wayanad; Major leaders filing nominations

மனித - விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி அமைப்பது போன்ற பிரச்சனை உள்ளது. இந்த தேர்தல் போராட்டத்தில் வயநாடு மக்களுடன் நான் நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. டெல்லியில் எங்கள் ஆட்சி அமைந்தால், கேரளாவில் ஆட்சி அமைந்தால், இந்த இரண்டையும் செய்வோம். இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதன் மூலம், வயநாடு தொகுதியில் முக்கிய தலைவர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.