Skip to main content

பிரபல நடிகர் மர்ம மரணம்; காருக்குள் சடலமாக மீட்பு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

kerala Famous Actor Mysterious lost his life and Rescue in a car

 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலையாள நடிகர் வினோத் தாமஸ் (45). இவர் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும், ஹேப்பி வெட்டிங், வாசி, நதொலி ஒரு செறிய மீனலா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில், நேற்று (18-11-23) இரவு இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், பம்படி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் வளாகத்தில் நேற்று வெகு நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதில் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், அந்த கார் நின்று கொண்டிருந்த இடத்தை பார்த்தனர். அப்போது, அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டு இருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே, அவர்கள் அந்த கார் கண்ணாடியை தட்டி பார்த்த போது உள்ளிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த கார் கண்ணாடியை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு காருக்குள் நடிகர் வினோத் தாமஸ் இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர் உணர்வற்ற நிலையில் இருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
A government bus caught fire

கேரளாவில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து என்ஜினில் இருந்து திடீரென புகை வெளிப்பட்ட நிலையில், எரியத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

மொத்தமாக 54 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் கீழே இறங்கி நிலையில், தீயானது பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெருமுயற்சி எடுத்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்தின் அனைத்து பகுதிகளும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விஜய் பட நடிகரின் வித்தியாசமான கிஃப்ட் - கல்யாணத்தில் கலகலப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
actor benjamin gift garlic to new married couples

வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பெஞ்சமின். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மெய்ப்படச் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தில் நடந்த திருமண நிகழ்வில் நடிகர் பெஞ்சமின் கலந்து கொண்டுள்ளார். அப்போது மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலை மற்றும் 2 கிலோ பூண்டு அடங்கிய பூங்கொத்து ஆகியவைகளை கொடுத்து வாழ்த்தினார். அவரோடு நடிகர் முகமது காசிம் என்ற நடிகரும் சென்றுள்ளார். இவர்களின் பரிசைப் பார்த்து மணமக்கள் புன்னகைத்து வாங்கிக் கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பூண்டின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் உயரத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக 1 கிலோ பூண்டு ரூ.500 முதல் ரூ.550 வரை விற்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.