Skip to main content

தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை பாயும் - கெஜ்ரிவால் அதிரடி!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
vb



இந்தியாவில் கரோனா பாதிப்பு என்பது சில மாநிலங்களில் அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து வருகின்றது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை செய்து தர அந்தெந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


இதுதொடர்பாக அவர் பேசும்போது, “மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள் கையிருப்பில் இருக்கின்றது. படுக்கைகளும் போதுமான எண்ணிக்கையில் உள்ளன. அரசு மற்று தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள புதிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுப்பதாக தகவல்கள் வெளிவருகின்றது. அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கைள் பாயும்” என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்! 

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Enforcement department summons Delhi Chief Minister Arvind Kejriwal

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும் அமலாக்கத்துறையின் சம்மன்கள் பொய்யானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ஜனவரி 18 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.