/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kashmir-std.jpg)
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த இஷ்ரத் முனீர் என்ற 25 வயது பெண் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத செயல்பட்டுகளை இந்த பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண்ணை பிடித்த தீவிரவாதிகள் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்துள்ளனர். ரத்தம் வழியும் முகத்துடன் அந்த பெண் துடிப்பதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணை சுட்டு கொன்று உடலை வீசி சென்றுள்ளனர்.
காஷ்மீரில் ஜைனபோராவின் டிராகா மலை பகுதியில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)