Skip to main content

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Karthi Chidambaram

 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று சிபிஐ போலீசார் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடக, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

ரூ. 820 கோடி பரிவர்த்தனை; வெளியான அதிர்ச்சி தகவல்! 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
820 crore transaction; Shocking information released

யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் 41 ஆயிரம் பேரின் கணக்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் ரூ. 820 கோடி பரிவர்த்தனை நடைபெற்றன. இதேபோன்று பிற வங்கிகளில் இருந்தும் 14 ஆயிரம் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது குறித்து யூகோ வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் யூகோ வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தனிநபர் தொடர்பான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக இரண்டாவது நாளாக ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் 67 இடங்களில் இன்று (07.03.2024) சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

மத்திய ஆயுத படையினர், காவலர்கள், சிபிஐ அதிகாரிகள் கொண்ட 40 குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் யூகோ, ஐடிஎப்சி ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரு ஹார்டு டிஸ்க், 40 செல்போன்கள், 43 டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.