தனது மகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், கோபத்தில் தனது பத்து வயது பேரனை பாட்டியே கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

karnataka second marriage issue

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் 65 வயதான சாந்தம்மா. இவரது மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் ப்ரஜ்வால் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் சாந்தம்மாவின் மகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுள்ளார். இதனையடுத்து ப்ரஜ்வால் தனது பாட்டி சாந்தம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

தனது மகளிடம், இரண்டாவது கணவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வரும்படி சாந்தாம்மா வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது மகள் பிடிவாதமாக இருந்ததால் விரக்தியடைந்த சாந்தாம்மா, பள்ளிக்கு சென்று வந்த தனது பேரன் ப்ரஜ்வாலின் கை, கால்களை கயிற்றால் கட்டி ஹேமாவதி ஆற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அவரும் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Advertisment

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டுள்ளனர். பின்னர் நேராக அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்ற அவர், தனது பேரனை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். பாட்டியே பேரனின் உயிரை எடுத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.