கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இதை அடிப்படையாக வைத்து வன்முறைகள் வெடித்துள்ளது. தில்லி பல்கலைகழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கலவரம் வெடிக்கும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காதர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ஆளும் பாஜக அரசு கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. மாநிலமே பற்றி எரியும் என்று ஒரு முன்னாள் அமைச்சர் பேசுவது நல்லதல்ல என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.