Karnataka election date notification released

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

Karnataka election date notification released

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீடு மீது பஞ்சாரா சமூகத்தினர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இப்படியான பரபரப்பு சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

Karnataka election date notification released

அதேபோல், கடந்த 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கர்நாடக மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தாவணகெரே பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “கர்நாடகாவை கட்சிக்காரர்களின் ஏடிஎம் மெஷினாக கருதுகிறது காங்கிரஸ்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று காலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Karnataka election date notification released

அதன்படி, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப். 13 ஆம் தேதி தொடங்கிஏப். 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப். 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே. 10 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.