Skip to main content

ரயிலுக்குள் சென்ற அடையாளம் தெரியா நபர்; பற்றி எரிந்த ரயில்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

In Kannur, Kerala, there was a commotion after a train coach caught fire

 

இன்று அதிகாலை கேரள மாநிலம் கண்ணூரில் ஆலப்புழா - கண்ணூர் அதிவிரைவு எக்ஸ்ப்ரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

 

தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து தீப்பிடித்த பெட்டி மற்ற பெட்டிகளிடம் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர் ரயிலின் உள்ளே நுழைந்துள்ளார். இதன் பின்பே ரயில் தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்று காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி, கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு பயங்கரமான ரயில் எரிப்பு சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ரயில்வே சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் கோழிக்கோட்டில் எலத்தூர் அருகே உள்ள கோரபுழா பாலத்தில் வந்தபோது, ஷாருக் சைஃபி ரயிலுக்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் தீக்காயம் அடைந்தனர். தீயில் இருந்து தப்பிக்க முயன்ற மூவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரயில் தடம் புரண்டு விபத்து; மீண்டும் பரபரப்பு

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Train derailment accident; The excitement again

உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - திப்ரூகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் நான்கு ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மீண்டும் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மைசூர் விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு; கடலூர், சிதம்பரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
people are happy as the Mysore Express has been extended to Cuddalore

கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகவும், சிதம்பரம் நகரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்,  நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் எனச் சிதம்பரம் சுற்றுலா மற்றும் ஆன்மீக நகரமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாகக் கோயம்புத்தூர், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் வணிகர்கள், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில், மயிலாடுதுறை கோவை ஜென் சகாப்தி விரைவு ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், சிபிஎம், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்  மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இதற்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரதம், ரயில் மறியல், கோரிக்கை முழக்கப் போராட்டம் என முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமையில் இது குறித்து 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 7-ஆம் தேதி ஜென்சதாப்தி, மைசூர் ரயிலைக் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலால் ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் அறிவித்த ரயிலை உடனே இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கத்தினர் சார் ஆட்சியரைச் சந்தித்து ஜூன் மாதம் கடிதம் அளித்தனர்.

இதனையொட்டி நீண்ட கால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே முதல் கட்டமாக மயிலாடுதுறை - மைசூர் 16231/ 16232 விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையறிந்த சிதம்பரம், கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடலூர் துறைமுகத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் வசதி, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியவர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் மயிலாடுதுறைக்குக் காலை 7 மணிக்கு மைசூர் ரயில் வரும் 7.05 கடலூர் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் செல்லும் முதல் நாள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் அடுத்த நாள் தான் நேரம் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.