Skip to main content

“சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினம்” - கங்கனா ரனாவத்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Kangana Ranaut says Political life is more difficult than cinema

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதில், ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கங்கனா ரனாவத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “எனது பெரிய தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏவாக இருந்தவர். எனவே இந்த சலுகைகள் என் குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததில்லை. என்னுடைய முதல் படமான கேங்க்ஸ்டர் படத்திற்குப் பிறகு நான் அரசியலில் சேர முன்வந்தேன். எனது தந்தையும் சகோதரியும் பல ஆண்டுகளாக இதே போன்ற சலுகைகளைப் பெற்றுள்ளனர். அரசியலில் சேர என்னை அணுகுவது இது முதல் முறையல்ல. 

இது ஒரு கடினமான வாழ்க்கை. திரைப்படங்களைப் போல அல்ல. ஒரு திரைப்பட நடிகராக நீங்கள் ஒரு திரைப்பட நடிகராக, செட் மற்றும் பிரீமியர்களுக்குச் செல்வார்கள், நிம்மதியாக இருப்பார்கள். மருத்துவர்களை போலவே, அரசியல் வாழ்க்கை ஒரு கடினமான வாழ்க்கை. பிரச்சனையில் இருப்பவர்கள் மட்டுமே உங்களைப் பார்க்க வருகிறார்கள்.

நீங்கள் ஒரு படம் பார்க்கச் சென்றால், ரொம்ப ரிலாக்ஸ்டாக இருப்பீர்கள். ஆனால் அரசியல் அப்படி இல்லை. எனது குருவான சத்குரு ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகு தான் இந்தப் பாதையில் பயணித்தேன். நீங்கள் விரும்புவதைச் செய்தால் நீங்கள் புத்திசாலி, ஆனால் தேவையானதைச் செய்தால், நீங்கள் ஒரு மேதையாக மாறுவீர்கள் என்று என் குரு சொன்னார். அதன்படி தான் நான் அரசியலுக்கு வந்தேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“டிரம்ப் உயிர்தப்பியதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர்” - கங்கனா ரனாவத்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Kangana Ranaut said that Left Is Desperate That Trump Has Survived

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் உயிர் தப்பியுள்ளதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என நடிகையும், நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும் போதே சுடப்பட்டார். ஆனால் கொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பியதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 80 வயதாகும் டிரம்ப் தன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் ‘அமெரிக்கா வாழ்க’ என்று கோஷமிடுகிறார். எப்போது வலதுசாரிகள் சண்டையை தொடங்குவதில்லை. முடிவுகட்டவே நினைக்கின்றனர். டிரம்பின் மார்பில் தோட்டாக்கள் பாய்ந்தது. ஆனால் அவர் மட்டும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியாமல் இருந்திருந்தால் டிரம்ப் உயிர்பிழைத்திருக்க மாட்டார்.  இடதுசாரிகள் அடிப்படையில் அமைதி, அன்பை நம்புகிறார்கள்; ஆனால் டிரம்பை கொலை செய்ய முயல்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“இந்து மக்கள் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” - கங்கனா ரனாவத் கண்டனம்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Kangana Ranaut condemns Reasi incident

ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து தடுமாறி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு  குடியரசுத் தலைவர், ராகுல்காந்தி எம்.பி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும், நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரனாவத், ரியாசி பகுதியில் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து   அவரது சமூக வலைதளங்களில், தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் குணம் பெற வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.