Skip to main content

ஜார்க்கண்ட் தேர்தல்- மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (12.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. இந்த மாநிலத்தின் ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் நிலையில் இன்று (12.12.2019) மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 

jharkhand assembly polls third phase 17 assembly constituency peoples


இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மூன்றாம் கட்டமாக நடைபெறும் ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ட்விட்டர் வாயிலாக பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

bihar assembly election thied phase peoples voting

 

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 78 சட்டப்பேரவை தொகுதிகளில் தொடங்கியது.

 

15 மாவட்டங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மாலை 04.00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

 

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 10- ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

 

 

Next Story

ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. 
 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (23.12.2019) சரியாக காலை 08.00 மணிக்கு தொடங்கியது. 

JHARKHAND ASSEMBLY VOTE COUNTING CONGRESS ALLIANCE LEADING


தற்போதைய நிலவரப்படி (11.15 AM) மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி 27 இடங்களிலும், ஜெவிஎம் 3 இடங்களிலும், மற்றவை 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 42 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.