Skip to main content

“இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்” - ஐ.ஜ.த எம்.பியின் சர்ச்சை பேச்சு!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
JDU MP's controversial speech about Islamists

சமீபத்தில் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். இதில், பீகார் மாநிலம், சீதாமர்ஹி மக்களவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் அர்ஜுன் ராயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் தேவேஷ் சந்திர தாக்கூர் வெற்றி பெற்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர் மற்றும் யாதவ் சமூகத்தினர் தனக்கு வாக்களிக்காததால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்கமாட்டேன் என்று எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தேவேஷ் சந்திர தாக்கூர் பேசிய வீடியோவில், “முஸ்லீம் மற்றும் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வர விரும்புவோர், வரலாம். தேநீர், சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதோ வேலைக்காக என்னிடம் வந்தார். அவர் முதல் தடவை வந்திருக்கிறார்னு நான் தெளிவா சொல்லிட்டேன். அதனால் அதைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. நீங்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்தீர்களா? என்று அவரிடம் கேட்டேன். அவரும் அதை ஒப்புக்கொண்டார். டீ சாப்பிட்டு விட்டு போக சொன்னேன். உங்களுக்கான வேலையை நான் செய்ய மாட்டேன்” என்று பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், “எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது பிரதமராக இருந்தாலும், எந்தத் தலைவரும், எந்த ஜாதியையும், சமூகத்தையும் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ஒரு பகுதியின் பிரதிநிதியாகிறார். தேவேஷ் சந்திர தாக்கூர் இப்போது சீதாமர்ஹியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் சமமாக இருக்க வேண்டும். ஜாதி, சமூகம் என பாகுபாடின்றி அனைவருக்கும் பணி செய்ய வேண்டும். பாஜகவுடன் தனது கட்சி கூட்டணியில் இருந்தாலும் அவர் காவி நிறத்தில் இருக்கக் கூடாது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளும் கட்சியை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் நிகழ்த்திய சாதனை; படுதோல்வியில் நிதிஷ்குமார்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
independent candidate won at byelection in bihar

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இதில் பீகாரின் ரூபாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த சங்கர் சிங், தற்போது அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று பெற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகள் பெற்று 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. 

Next Story

‘உங்கள் காலில்கூட விழுகிறேன்...’ - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கெஞ்சிய நிதிஷ்குமார்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Nitish Kumar begged the IAS officer in bihar

பீகார் மாநிலத்தில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எளிதாக்குவதற்காக ஆற்றின் குறுக்கே ஜே.பி.கங்கா பாதை என்ற பாதை திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு பகுதி முடிவடைந்ததை தொடர்ந்து, அந்தச் சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னவில் நேற்று நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ​​மற்றும் எம்.பி ரவிசங்கர் பிரசாத் போன்ற உயரதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

இதில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், “இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் நான் உங்கள் கால்களில் கூட விழுகிறேன்” என்று கூறியபடி அங்கிருந்த அதிகாரி ஒருவரை நோக்கி நிதிஷ்குமார் நெருங்கினார். இதனைச் சுதாரித்துக் கொண்ட அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, சில அடிகள் பின்வாங்கி., ‘சார், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ எனப் பதற்றத்துடன் கூறினார். நிதிஷ்குமார் அதிகாரியை நோக்கி நெருங்கி வந்ததைக் கண்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது குறித்து அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, “எந்த அதிகாரியோ, ஒப்பந்ததாரரோ நேர்மையாக பணி செய்யவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் கைகளை கூப்பி பிச்சை எடுக்கக்கூடாது. முதல்வர் தன்னை அல்ல, பதவியை அவமதிக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.