Skip to main content

ஜனநாயகத்தில் எதிர்கருத்து என்பது பாதுகாப்பு வால்வு -5 பேர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

 

court

 

 

 

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி  திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேரை நேற்று புனே காவல்துறை கைது செய்தது. 

 

இந்த கைது தொடர்பாக  ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை  வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையீடப்பட்டது.இன்று மதியம் விசாரணை எடுக்க படும் என்று ஒத்துக்கொள்ளவே மாலை 4.30 மணி அளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கான் வில்கர் மற்றும் நீதிபதி சந்திரா சூடு  ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு  வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  

 

இந்த விசாரணையின் போது அரசு சார்பில் வழக்கறிஞர்  துஷார் மெஹதவும், ரீட் மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது நீதிபதி சந்திரா சூடு" ஜனநாயகத்தில் எதிர்கருத்து என்பது பாதுகாப்பு வால்வு . அதை தொடர்ந்து எதிர்த்தும் அழுத்தும் போதும் அது ஒரு கட்டத்தில் வெடித்து விடும். அது போன்ற ஒரு நிலை எப்போதும் வந்துவிட கூடாது" என குறிப்பிட்டார்.

 

court

 

 

 

அதே போல அபிஷேக் மனு சிங்வி வாதத்தில் " இது போன்ற தொடர்ச்சியான கைதுகள் நடந்து வருகிறது. இதனால் ஜனநாயகம் என்பது படுகொலை செய்யப்பட்டது போல ஆகிவிடும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டார். 

 

அதற்கு நீதிபதிகள் " அது எங்களுக்கு நன்றாக  புரிகிறது . எதற்காக இந்த கைது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.அதற்காக தான் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். 5 போரையும் வீட்டுக்காவலில் வைக்க  உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்து வைத்தனர்.  

 

 

அதற்கு முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதம் நவ்லகா சார்பாக அவருடைய வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

 

இந்த மனு மீதான விசாரணையின் போது, ஏன் கவுதம் நவ்லகாவை கைது செய்தோம் என்று எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் கூற முடியாமல் மகாராஷ்டிரா காவல்துறை திணறியிருக்கிறது. அதே போல , அவரை புனே அழைத்துச் செல்வதற்காக மகாராஷ்டிரா காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்களிலும் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 

 

அதை பார்த்த பின்னர் நீதிபதி  "அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது?" என  கேட்டபோது, அதிகாரிகள் தெளிவான எந்தவொரு பதிலையும் கூறவில்லை. அதன் பிறகுதான் அவரை புனே அழைத்துச் செல்ல கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், புனேவில் நடைபெற்ற எல்கார் பரிஷத் நிகழ்விலும் நவ்லகா கலந்துகொள்ளவில்லை என அவரது வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் நீதிபதியிடம்  தெரிவித்திருக்கிறார்.

 

அதுமட்டுமல்லாமல், நவ்லகா  வீட்டில் சோதனையிடவும், அவரை கைது செய்யவும் எந்தவொரு விதிமுறையும்  மகாராஷ்டிரா காவல்துறை கடைபிடிக்கப்படவில்லை , கைது வாரண்ட் மராத்தியில் இருந்ததாகவும்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நவ்லகாவை புனே அழைத்துச் செல்வதற்காக மகாராஷ்டிரா போலீஸார் அரை மணிநேரத்தில் கீழமை நீதிமன்றத்தில் ரிமாண்ட் உத்தரவு பெற்றது எப்படி என்பது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

நவ்லகாவை கைது செய்ய சாட்சிகளை புனேவிலிருந்து மகாராஷ்டிரா போலீஸார் அழைத்து வந்துள்ளனர். ஆனால், கைது செய்யப்படும் நபர் எங்கு கைது செய்யப்படுகிறாரோ அந்த பகுதியை சேர்ந்தவர்தான் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதானே சட்டம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரண்டு மாநில காவலருக்கு விபூதி அடித்த கும்பல்; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
gang was arrested for smuggling cannabis from Odisha to Vellore

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திரா எல்லைப்பகுதியான உள்ளிப்புதூர் அருகே வேலூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 4 இளைஞர்களை மடக்கி சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடந்து விசாரணை செய்தனர். அதில், நான்கு இளைஞர்களும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவைச் சேர்ந்த விஜய்(23) ரிஷிகுமார்(20), நெடுஞ்செழியன்(23) விக்னேஷ்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநிலம் அனாங்காப்பள்ளி பகுதியில் இருந்து இரயில் மூலம் ஆந்திரா மாநிலம் சித்தூர் வரை கடத்திவந்து, அங்கிருந்து இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வேலூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. 

இளைஞர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

Next Story

போலி சான்றிதழ்; நடராஜர் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட மாஃபியா கும்பல் கைது!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram

சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024) இரவு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது.  இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதன் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கிடந்த சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை செய்த போது போலி சான்றிதழ்கள் எனத் தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவருடன் நாகப்பன் மற்றும் வேறு ஒருவரும் தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

பின்னர் இது குறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் உள்ள அனைத்து விதமான பல்கலைக்கழகங்களுக்கும் இவர்கள் 5000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை அச்சடித்து விற்பனை செய்துள்ளதும் மேலும் 1000-த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதற்காக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
 

Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram
சங்கர் - நாகப்பன்

இவர்கள் போலி சான்றிதழ் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் போலி சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இவர்கள் வழங்கிய போலி சான்றிதழ்களை வைத்து பல்லாயிரம் கணக்கானோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களா? மேலும் இந்தப் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் செய்வதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் இதன் நெட்வொர்க் உள்ளதா? இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் பெரும் புள்ளிகள் சிக்குவார்களா எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.