Skip to main content

லட்சங்களை தாண்டிய அம்பானி வீட்டு திருமண புகைப்படங்கள்

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

amb

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 710 கோடி செலவில், பாலிவுட் நட்சத்திரங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்  தலைவர்கள் என பலர் கலந்துகொண்ட இந்த திருமணம் அனைத்து விதத்திலும்  பிரமாண்டத்தை பிரதிபலித்தது. இதன் பிரம்மாண்டங்களை மீறி பெரும் பேசுபொருளாக இருந்த விஷயம் இந்த திருமணத்தின் புகைப்படங்கள். திருமணத்தின் பிரம்மாண்டத்தையும், அழகையும் அப்படியே படம்பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இது குறித்து, இந்த புகைப்படங்களை எடுத்த கர்நாடகாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் விவேக் செகுயிரா கூறுகையில், 'இந்த திருமணத்திற்காக என்னை ஜூன் மாதமே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அது அம்பானி இல்ல திருமணம் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. இது பற்றி  தெரிந்த பின்னர் அதனை நம்ப எனக்கு 2 நாட்கள் ஆனது. திருமணம், அதற்கு முந்தைய சடங்குகள் என அனைத்து நிகழ்வுகளையும் சேர்த்து 1.2 லட்சம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது' என கூறினார். மேலும் தன் வாழ்வில் அதிகமான புகைப்படங்கள் எடுத்த திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என அவர் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு ஏன் செல்லவில்லை?’ - டாப்ஸி பதில்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Taapsee answers Why didn't Mukesh Ambani go to a house wedding?

உலகில் பிரபல பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியாவில் முக்கியமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த 13ஆம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

இந்தியாவை பொறுத்தவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே, அட்லீ உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பிரபல மல்யுத்த குத்து சண்டை வீரர் ஜான் சீனா,  ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். பல பிரபலங்கள் கலந்துகொண்டாலும், சிலர் இதில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டனர். அதில், முக்கியமானவர் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நாயகி டாப்ஸி. 

பிரபல நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு செல்லாதது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. திருமணங்கள் என்பது விருந்தளிக்க குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால், விருந்தளிக்கும் குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே ஒருவிதமான தொடர்பு இருக்கும் திருமணத்திற்கு செல்லவே விரும்புகிறேன்” என்று கூறினார். 

Next Story

உயரும் ரீசார்ஜ் கட்டணம்; பிள்ளையார் சுழி போட்ட ஜியோ

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rising recharge charges;jio announce

மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் 24-06-24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பின் முதலாவது முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ தற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.