உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. 180- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,413 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பதிப்பில் இருந்து 1,08,388 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisment

iran mahan flight 277 indian passengers arrive delhi

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

iran mahan flight 277 indian passengers arrive delhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரான் நாட்டில் டெக்ரானில் இருந்து முதற்கட்டமாக277 இந்தியர்கள் மகான் ஏர் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தினர்.

ஏற்கனவே சீனா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1000- க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.