Intensification Chitrang-India Meteorological Department warning

Advertisment

சிட்ரங் புயல் அதிதீவிர புயலாக மாற்றமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம் மாநிலம் சாகர் தீவிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளசிட்ரங்புயலானது நாளை காலை வங்கதேசத்தின் டென்கோனா மற்றும் சான்வீப் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் பர்கானாஸ், மெக்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்புயல் காரணமாக மேற்குவங்க மாநிலத்தின் கடலோர கிராமங்கள் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.