DELHI

Advertisment

இந்தியச் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பாகவே, குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ள உளவுத்துறை, டெல்லியில் தீவிரவாதிகள் 'ஆபரேஷன் ஜிஹாத்தை' செயல்படுத்த இருப்பதாகவும், அதன் தொடக்கமாக மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து டெல்லி காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.