Skip to main content

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா!!!

Published on 20/08/2018 | Edited on 20/08/2018

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரங்கநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாய் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். மேலும் அன்றைய தினமே நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவும் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.

 

infosys

 

ரங்கநாத் கடந்த மூன்று வருடங்களாக அந்நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாய் பணியாற்றி வந்தார். மேலும் பதினெட்டு ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் பல முக்கிய செயல்பாடுகளின் தலைமை பொறுப்புகளில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

இதுகுறித்து ரங்கநாத் "கடந்த பதினெட்டு வருடங்களாக இந்நிறுவனத்தில் பணியாற்றினேன் அதில் மூன்று வருடங்கள் தலைமை நிதி அதிகாரியாய் பணியாற்றியுள்ளேன். மேலும் இப்போது புதிய பகுதிகளில் தொழில் வாய்ப்புகளைத் தொடர திட்டமிடுகிறேன்." என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.