Skip to main content

இந்தூர் கோவில் கிணறு விபத்து சம்பவம்; உயிரிழப்பு அதிகரிப்பு

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Indore temple well accident incident; The death toll rises to 35

 

கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெலாஷ்கர் மஹாதேவ் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான பவ்டி என்ற கோவில் கிணறு ஒன்று உள்ளது. நேற்று இந்த கிணற்றின் கூரை(மூடி) சரிந்து விழுந்து திடீரென விபத்து ஏற்பட்டது. கிணற்றிற்குள் 30க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

நேற்று இரவு வரை 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளன. ராம நவமியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஏராளமான கோவில்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்தூர் கோவிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கிணற்றின் கூரை சரிந்து விபத்துக்குள்ளாகி 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ''துரதிஷ்டமான சம்பவம் இது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் 'இந்தூர் சம்பவம் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. மாநில முதல்வரிடம் பேசி நிலைமை என்னவென்று அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளது மத்திய பிரதேச அரசு.

 

இதேபோல் நேற்று ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா என்ற பகுதியில் உள்ள கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது நிழற்பந்தல் தீப்பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Extension of darshan time at Sabarimala

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அம்மன் கழுத்திலிருந்த தாலியைப் பறித்துச் சென்ற நபர்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
theft inside temple near vellore

வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

theft inside temple near vellore

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர்.