covid 19 vaccine

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்குசெலுத்தும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கரோனாமுன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில்பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு இன்று (20.01.2021) கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி, "உலக சமுதாயத்தின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில், நீண்டகாலமாக நம்பிக்கையான துணைவனாக இருப்பதில் இந்தியா கௌரவம் கொள்கிறது" என கூறியிருந்தார்.

Advertisment

இதையடுத்து இன்று, இந்தியாவிலிருந்து பூட்டான் நாட்டிற்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், மாலத்தீவிற்கு 1 லட்சம் தடுப்பூசிகளும் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.