இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்தநிலையில்தற்போது நாட்டில் தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு மட்டுமே கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 871 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 35 ஆயிரத்து 939 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர். நாட்டில் கரோனாஉறுதியாகும் சதவீதம் 13.39 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.