/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sfsfsd.jpg)
கரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 6,97,836 பேர் இந்த வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 19,700 பேர் இந்தத் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக இந்தியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. இந்தப் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கடுத்த இடத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)