இந்தியாவில் ஏற்பட்ட கரோனா மூன்றாவது அலையின் காரணமாக மூன்றரை லட்சத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு, அதன்பின்னர் தொடர்ந்து குறையத் தொடங்கியது. இந்தநிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்ட 1192 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதியாகும் சதவீதம் 11.69 சதவீதமாக இருந்து வருகிறது.