Skip to main content

இந்தியாவில் கரோனா பாதிப்பு 67 லட்சத்தைத் தாண்டியது!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

india coronavirus peoples

 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 

இன்று (07/10/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,85,083- லிருந்து 67,57,132 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,03,569- லிருந்து 1,04,555 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.62 லட்சத்திலிருந்து 57.44 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்த 9.07 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72,049 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் கரோனாவுக்கு 986 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.55% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 85.02% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டி20 உலகக் கோப்பை தொடர் : இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
T20 World Cup Series: Indian team in the final

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ரன் குவிக்க முடியாமல் விராட் கோலி தடுமாறி வரும் நிலையில் நேற்றைய போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடி இந்தியாவின் ரன்களை உயர்த்தினர். ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்தனர். 

T20 World Cup Series: Indian team in the final

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது . 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் நாளை (28.06.2024) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. முன்னதாக 2007 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது. 

T20 World Cup Series: Indian team in the final

முன்னதாக நேற்று காலையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“இந்தியா எதிரி நாடுதான் இருந்தாலும்...” - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pakistan Opposition Leader says Though India is an enemy country

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை இந்தியா சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தியதற்காகப் பாராட்டியதோடு, தனது நாட்டிலும் இதேபோன்ற செயல்முறையை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செனட்டில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், “எதிரி நாட்டின் உதாரணத்தை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. இருந்தாலும் சமீபத்தில், அங்கு (இந்தியா) தேர்தல்கள் நடத்தப்பட்டன.  800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகள் இருந்தன. சில வாக்குச் சாவடிகள் ஒரு இடத்தில் ஒரு வாக்காளருக்காகவும் அமைக்கப்பட்டன. ஒரு மாத காலப் பயிற்சி முழுவதும் இ.வி.எம்கள் மூலம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததா என்று இந்தியாவில் இருந்து ஒரு குரல் கூட கேட்கவில்லை. 

எவ்வளவு சீராக மின்சாரம் பரிமாறப்பட்டது. நாமும் அதே நிலையில் இருக்க விரும்புகிறோம். இந்த நாடு சட்ட உரிமைக்காகப் போராடி வருகிறது. இங்கே, வாக்கெடுப்பில் தோற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும் வெற்றியாளரும் அவரது சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படியான அணுகுமுறை நமது அரசியல் அமைப்பை வெறுமையாக்கியுள்ளது” என்று கூறினார்.