Published on 22/01/2023 | Edited on 22/01/2023
உலகின் மிகப் பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலக மக்கள் தொகை ஆய்வு மையம் உலகின் பழமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஈரான் நாடு முதல் இடத்தையும், எகிப்து இரண்டாம் இடத்தையும், வியட்நாம் மூன்றாம் இடத்தையும், அர்மேனியா நான்காம் இடத்தையும், வடகொரியா ஐந்தாவது இடத்தையும், சீனா ஆறாவது இடத்தையும், இந்தியா ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. கி.மு 3200ல் ஈரானின் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன என்றும் அதேபோல கி.மு 2000ல் முதன் முதலாக இந்தியாவில் ஒரு அரசு உருவானதாகவும் கூறப்படுகிறது.