Skip to main content

கரோனாவை விட கொடிய நோய்! இஸ்லாமியர்களை மிரட்டும் அவலம்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

நாடு முழுவதும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதும், கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆயிரக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாநாடும், அதில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதும் தற்செயலான நிகழ்வாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கும் முக்கிய காரணமாக இருக்கிறதெனினும், நாடெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் பரப்பப்பட்டது.

 

incident in utrakhand


குறிப்பாக, கரோனா ஜிகாத் என்ற பெயரில், இஸ்லாமியர்கள்தான் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது சாமான்ய மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்தவானி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வரும் சிலர், சாலையோரத்தில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் பெயரைக் கேட்கிறார்கள். அவர் இந்துவா முஸ்லீமா என்பது அதில் தெரிந்துவிடும். ஒருவேளை இஸ்லாமியராக இருந்தால், உடனடியாக கடையை மூடிவிட்டு கிளம்பச் சொல்கிறார்கள். இந்துவாக இருந்தால், ஆதார் அட்டையைக் காட்டச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதில் உறுதிசெய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 

nakkheeran app



“தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக்கொள்ளவும், சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. பலரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுமே கரோனா வைரஸைப் பரப்புகிறார்கள்” என்ற கருத்து எங்கிருந்து வந்ததென்பது தெரியவில்லை என்று புலம்புகிறார் சாலையோரத்தில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் கைதுசெய்துள்ளதாக ஹல்தியானி காவல்துறை தெரிவித்துள்ளது.  

கரோனா என்கிற கொடிய நோய்க்கு அஞ்சி வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். உடலளவில் இடைவெளி விட்டு, உள்ளத்தளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்த சூழலில், மதவெறி என்கிற மனநோய் சிலரை ஆட்டிப் படைப்பது வேதனை அளிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். 

Next Story

ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
All India Muslim Jamaat President says Every Muslim should welcome CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்து அராஜகங்களை சந்திக்கும் இஸ்லாமியர் அல்லாதோர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இதற்கு முன்பு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தச் சட்டம் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில், தவறான புரிதல்கள் காரணமாக, இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள், இஸ்லாமியர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.