உத்திரபிரதேசம் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பாஜகவையே கவிழ்ப்பேன் என சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
கேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நீதி, அரசியல்,நம்பிக்கை போன்ற தலைப்புகளில் பேசிய சுப்பிமணியசாமி தனக்கு இரண்டு எதிர்க்கட்சிகள் இருப்பதாகவும், ஒன்று மத்திய பாஜக மற்றொன்று உத்திரபிரதேச அரசு. இந்த இரு அரசுக்கும் என்னை எதிர்க்க தைரியம் இருக்கிறதா?அப்படி எதிர்த்தால் அவர்களின் ஆட்சியையே கவிழ்ப்பேன் எனக்கூறினார்.
மேலும் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைய எனக்கு தெரிந்த முஸ்லீம்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த நிலம் முகலாய ஆட்சியாளர் பாபர் காலத்தில் பறிக்கப்பட்ட இந்துக்களின் நிலம் என சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது எனக்கூறினார். ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக அரசையே கவிழ்ப்பேன் என சுப்ரமணியசாமி கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.