Skip to main content

'அவருக்கு தமிழகத்தின் வளர்ச்சியில் இருந்த அக்கறையை அறிந்தேன்' -எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்! 

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

 I know his interest in the development of Tamil Nadu '- Modi mourns the death of MP Vasanthakumar

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இன்று  மாலை காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த 9ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு கரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வணிகம் மற்றும் சமூக சேவையில் எச்.வசந்தகுமார் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எச்.வசந்தகுமாருடன் உரையாற்றுகையில் தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அறிந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.