Skip to main content

'Fair' -க்கு குட்பை சொல்லும் 'Fair & Lovely'...

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

hul to rebrand fair and lovely without fair

 

‘ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற சொல்லை நீக்கிவிட்டு மறுபெயரிடுதல் செய்யப்போவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Black Lives Matter இயக்கம் மூலமாக, உலகம் முழுவதும் நிறவெறி மற்றும் நிறத்தின் அடிப்படையில் ஒருவரது அழகினை அளவிடுதல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு பிறகு, நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் உலகின் பல பகுதிகளில் வெடித்துள்ளன. இதில் பெருமளவு மக்கள், அழகுசாதன நிறுவனங்களின் நிறம் குறித்த தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து பல அழகுசாதன நிறுவனங்களும் தங்களது சந்தைப்படுத்தும் முறைகளை மாற்றி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான 'ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற சொல்லை நீக்கப்போவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கருப்பாக உள்ளவர்கள் வெள்ளையாக அழகாக மாறுவதற்கு இந்த க்ரீமை பயன்படுத்தலாம் என விளம்பரப்படுத்தப்படும் இவ்வவகை பொருட்கள், கருப்பு என்பதனை அழகில்லாத நிறமாக மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது நிறவெறி எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு 'ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் இருந்து 'ஃபேர்' என்ற வார்த்தையை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அதன் தயாரிப்புகளில் இனி ‘fairness’, ‘whitening’ & ‘lightening’ போன்ற சொற்கள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை: குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்... வரவேற்ற குடும்பத்தினர்!  

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

DEREK CHAUVIN

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகரப் போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு இழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இதற்கிடையே ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டெரிக் சாவில் என்ற பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் ஏற்கனவே குற்றவாளியாக அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெரிக் சாவிலுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இந்தச் சிறை தண்டனை, உங்கள் பதவி மீதான நம்பிக்கை மற்றும் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும், ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு நீங்கள் காட்டிய கொடூரத்தையும் அடிப்படையாக கொண்டது" என நீதிபதி டெரிக் சாவிலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் ப்ளாய்ட்டின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். 

 

 

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது!  

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

darnella frazier

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்களும் ஆதரவளித்ததோடு, ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் எடுத்த அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலக முழுவதும் அதற்கு ஆதரவு எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

 

இந்தநிலையில், டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.