Skip to main content

ஆதார் கார்டை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழி!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

அணைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.பின்பு இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் அணைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமில்லை ஒரு சில சேவைகளுக்கு மட்டும் ஆதார் இருந்தால் போதும் என்று கூறியது. இதனையடுத்து ஒருவருடைய ஆதார் எண்ணை மற்றொருவர் முறைகேடாய் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இத்தவற்றை தடுக்கவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் ஆதார் சம்மந்தப்பட்ட ஆணையம் கூறியுள்ளது. 

 

aadhar card



நமது ஆதார் கார்டு ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாக அல்லது செல்போன் மெசேஜ் மூலமாகவும் ஆதார் எண்ணை முடக்க முடியும். மீண்டும் அதை திரும்ப பெறவும் முடியும். இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு 6 இலக்க ஓடிபி பாஸ்வேர்ட்  வரும். அதை LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபி  பாஸ்வேர்ட் டைப்செய்து அனுப்ப வேண்டும்.இப்படிச் செய்தால் ஆதார் எண் முடக்கப்படும்.செல்போனுக்கும் இது பற்றிய தகவலும்  வரும். அடுத்து மெசேஜ்  மூலமாக முடக்கத்தை திரும்ப பெற வேண்டுமெனில் ஆதார் விர்ச்சுவல் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு அனுப்ப வேண்டும்.


இதற்கு ஒரு ஓடிபி வந்ததும், UNLOCKUID ஸ்பேஸ் ஆதார் விர்ச்சுவல் எண்ணின் கடைசி 6 இலக்கம், ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை அனுப்பினால் முடக்கம் ரத்தாகி ஆதார் திரும்ப செயல்படத் தொடங்கிவிடும்.மேலும் www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை முடக்கலாம்.முடக்கியதை திரும்பவும் பெறலாம். இந்த இணையதளத்துக்கு சென்று மை ஆதார் என்பதை இயக்கி உள்ளே சென்றால் ஆதார் சர்வீஸ் என்று ஒரு அட்டவணை இருக்கும். அதில் ஆதார் லாக், மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்தோமானால் ஆதார் தவறாக உபயோகிக்கபடுவதில் இருந்து தவிர்க்கலாம்.
 

சார்ந்த செய்திகள்