Skip to main content

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கேரள தம்பதி...!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

கேரளாவில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகள் மசூதியில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

hindu couples wedding in kerala-mosque

 



கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பிந்து என்பவர் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, தனது மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் தவித்துள்ளார். பின்னர் அஞ்சு என்ற தனது மகளின் திருமணத்தை நடத்த உதவி செய்யுமாறு செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார்.

அந்த தாயின் நிலையை கண்டு, நிதி உதவி செய்ய சம்மத்தித்ததோடு, மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளவும் மசூதி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கும் செருவல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக தென்னைக் குலைகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு மசூதியில் பந்தல் போடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தப்பட்டது. மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.