Skip to main content

புக்கிங் முடிஞ்சுது.... 50 சதவீதம் பாஜக -வுக்கு தான்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

மத்திய, மாநில அரசுகள், தனியார் வசம் என நாட்டில் மொத்தம் 275 பதிவு பெற்ற ஹெலிகாப்டர்கள் உள்ளதாக ரோட்டரி விங் சொசைட்டி ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

 

bjp

 

இவைகள் அனைத்தும் தேர்தல் காலங்களில் தலைவர்கள் பிரசாரம் செய்ய வாடகைக்கு விடப்படுகின்றன. 180 முதல் 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டர்களுக்கு தேர்தல் காலங்களில் பயன்பாடு அதிகமாக உள்ளது.

முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பார்கள்.

அந்த வகையில் ஹெலிகாப்டர்களின் ரகங்களைப் பொறுத்து, ஒரு மணி நேரத்துக்கான கட்டணமாக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவில் மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் பாஜக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்