Published on 05/09/2018 | Edited on 05/09/2018

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் சுமார் 16 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளாதகவும் தெரிவித்துள்ளனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்டை அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.