head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போதுவெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில்தெரியாமல் தலையை மாட்டிக் கொண்டஎலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.