இந்தியாவின் மிகமுக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றான ஐஐடி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த ஐஐடிக்களில் சமீப காலங்களாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்திருப்பதாக தொடர்ந்து புள்ளிவிவரங்கள் வந்தவண்ணம் உள்ளன.

Advertisment

guwahati iit student passed away

அந்த வகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதன் அதிர்வலைகளே இன்னும் அடங்காத நிலையில் குவாஹாத்தி ஐஐடி யில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

ஜப்பானைச் சேர்ந்த கோட்டா அனோடா என்ற 23 வயது மாணவர், சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மூன்று மாத கால பயிற்சி படிப்பிற்காக கவுகாத்தி ஐ.ஐ.டியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த இவர், தனது பயிற்சியை முடித்துக்கொண்டு வரும் 30 ஆம் தேதி மீண்டும் ஜப்பான் திரும்புவதாக இருந்தார். இந்த சூழலில் நேற்று பிற்பகல் வரை, இவர் தங்கியிருந்த விடுதி அறை திறக்கப்படாமலேயே இருந்துள்ளது.

கதவை தட்டிப்பார்த்தும் எந்தவித பதிலும் வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் விடுதி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குவந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment