dfg

Advertisment

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக இடையே மட்டும் இருந்துவந்த இந்தப் போட்டி இந்த முறை ஆம் ஆத்மி வந்ததால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

இதற்கிடையே இன்று காலை தொடங்கிய முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. காலை முதலே அமைதியாக நடைபெற்று வரும் தேர்தலில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால் இன்று காலை முதலே முதியவர்களில் துவங்கி இன்று திருமணம் நடக்க இருந்தவர்கள், இளைஞர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். இதற்கிடையே அனைத்து தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதல்கட்டமாக57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.