Skip to main content

மத்திய அமைச்சரை சந்திக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

A group of MPs from all parties meeting the Union Minister

 

தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.

 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை டெல்லி செல்கிறது. டெல்லியில் நாளை மாலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜெந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கும் இக்குழுவினர் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை  திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர். தமிழக எம்.பி.க்கள் குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mild earthquake in Chengalpattu

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

Next Story

“மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
There will be no major announcements in the Union Budget Union Minister Nirmala Sitharaman

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் டெல்லியில் சிஐஐ சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “2024 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மரபுப்படி இடைக்கால பட்ஜெட்டாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே வரும் பிப்ரவரியில் பட்ஜெட், செலவு மானியக் கோரிக்கையாகவே தாக்கல் செய்யப்படும். அவ்வாறு  தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது” எனத் தெரிவித்துள்ளார்.