c

ரயில் நிலையத்திற்குப்பச்சை நிற பெயிண்ட் அடிப்பதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம் கலபுரகி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,வண்ணம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை ரயில் நிலைய முகப்பு பக்கத்தில் பச்சை நிற வண்ணத்தைப் பணியாளர்கள் அடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அங்கு வந்த இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள், பச்சை கலர் பெயிண்ட் அடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இதனால் என்ன செய்வது என்று குழம்பிய அதிகாரிகள்., பச்சை நிறபெயிண்ட்டுக்கு மாற்றாகவேறு வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.