samy

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்படுவதாகவும், கட்சி தாவ இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வருகிறது.

Advertisment

தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களை பிடித்தது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் கைப்பற்றின.

Advertisment

222 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்ததால் இவ்விரு கட்சிகளும் இணைந்தன. இதனால் இவ்வணிக்கு 78+37+1+2=118 இடங்கள் உள்ளன. பாஜக சார்பில் எடியூரப்பாவும், மஜத+காங்., சார்பில் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இருவரில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதே பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ‘’எடியூரப்பாவைத்தான் முதலில் ஆட்சி அமைக்க ஆளூநர் அழைப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment