Skip to main content

“பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்” - ஆளுநர் எச்சரிக்கை

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Governor Banwarilal  has warned that recommend President rule  Punjab

 

பஞ்சாபில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் என முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக இருக்கும் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே சட்டப் பேரவையைக் கூட்டுதல், பல்கலை. வேந்தர் பதவி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் முதல்வர் பகவந்த் சிங் மானுக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு பகவந்த் சிங் எந்த விதப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால், மாநில சட்ட ஒழுங்கு குறித்து நான் எழுதும் கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் அளிக்காவிட்டால் அரசியல் அமைப்பு சட்ட நடவடிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசிய போலீசார்; வீரியம் குறையாமல் தொடரும் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The struggle continues unabated and Police hurled tear gas at farmers

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியைக் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024)  பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர். அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தொடர்ந்து 3 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி மீண்டும் விவசாய அமைப்புகளுடன் சண்டிகரில் மத்திய அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இருப்பினும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சலோ என்ற பேரணி தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து, நேற்று (20-02-24) மீண்டும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.  அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லி போலீசார் ஏற்படுத்திய இரும்பு தடுப்புகளை, உடைக்க ஜேசிபி வாகனங்களை கொண்டு விவசாயிகள் முயற்சி செய்தனர். அவர்களை தடுப்பதற்கு, காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசினர். ஆனால், அதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள் முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.