Skip to main content

அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Government hospital nurses boycott work!
மாதிரி படம் 

 

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  

 

இந்தப் போராட்டத்தில் அவர்கள், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஆணையின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர். 

 

மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் இருவர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செவிலியர்களின் திடீர் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

‘வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி’ - புயலுக்கு வாய்ப்பா?

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Strengthened Low Pressure Area Chance of heavy rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகர்ந்து நாளை (30.11.2023) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (29.11.2023) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.